Monday, December 9, 2013

Thenkudi Thittai Famous Gurubagavan Temple

புராண வரலாறு
இத்தலத்தின் புராண வரலாற்றில் இங்கே வந்து வழிபடாதவர்களே இல்லை என்னும் அளவிற்கு சிவலோகமே திரண்டெழுந்து வணங்கிய புண்ணியத் தலம் திட்டை. அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் குரு கதிரவன் அதிபதியாக அமையவும், மேருமலையைச் சுற்றி வலம் வந்து உலகை ஒளி வீசிக் காக்கும்படியான வரத்தையும், ஆதிசேடன் பூமியை பூவாக எளிதில் தாங்கும் வல்லமையைப் பெற்றதும், வசிட்டர் பிரம்ம ஞானிகளுள் தலைசிறந்தவர் ஆனதும், காமதேனு புத்ரிகளாகிய நந்தினி, கமிலினி,பேறுபெற்றதும், பைரவர் கேத்திர தீர்த்த பாலகர் ஆனதும், யமன் தென்திசைக்கு தலைவன் ஆனதும், சனி நவக்கிரகங்களில் ஒருவனாக இடம் பெற்றதும, திருமால் மதுகடைபர்களை வெல்லும் ஆற்றல் பெற்றதும், பிரமன் உலகைப் படைக்கும் வல்லமையை அடைந்ததும் இத்தல இறைவனின் அருளால்தான் எனப்படுகின்றது. அகவினி தேவர்கள் இந்திரன், வசிட்டர், கௌதமர் முதலானவர்களும் வழிபட்டிருக்கின்றனர். நான்கு வேதங்களும் தனித்தனியே வந்து முறையிட்டு வணங்கித்தொழுது தங்கள் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்குக் காரணமாக நின்ற ஊர் தென்குடித் திட்டை. இதை முன்னை நான்மறையவை முறை முறை குறையொடும் தன்னைதான் தொழுதெழ நின்றவன் என்ற திருஞான சம்பந்தர் வாக்கில் காணமுடிகிறது. நவகிரகங்கள் ஒன்றுகூடி இறைவனை வணங்கிய தலம், சனி பகவானுக்கு பரிகாரம் செய்யவும் உகந்த தலம். "ஒம் கம் நம்ஹ பிதாமகாயஞ" என்ற நவா க்ஷர மந்திரத்தை அகத்திய முனிவர் உபதேசித்த புண்ணிய தலம்

இத்தலம் தஞ்சாவூர் வட்டம், பள்ளி அக்ரஹாரத்திலிருந்து மூன்றாவது கிலோ மீட்டரில் தென்குடித் திட்டை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது இது திருஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற தலமாகும். காவிரியின் தென்கரையில் அமையப்பெற்ற சிறப்புமிக்கத் தலம். திட்டை என்ற சொல்லுக்கு திட்டு அல்லது மேடு என்பது பொருளாகும். மேடு என்பதை ஞானமேடு என்றும் பொருள்கொள்ள லாம். ஆதிப்பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது. மும்மூர்த்திகளும் முக்குணங்களுக்குக் கட்டுப்பட்டு நீழ் சூழ்ந்தும். இருள் கவிழ்ந்தும் இருந்த இந்த பிரமாண்டத்தைப் பார்த்து அஞ்சினர். பரம்பொருளைள பலவாறு துதித்தனர். பார்வதி பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் ஊழிப்பெருவௌ்ளத்தின் நடுவே மேருமலைக்குத் தென்புறம் 10 மைல் பரப்பளவுள்ள மேட்டுப் பகுதியை கண்டு வியந்தனர். அம்மேட்டுப் பகுதியில் ஜோதிமயமானம காலிங்கத்தைக்கண்டு பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளுக்கும் அபயமளித்து படைத்தல், காத்தல், அழித்தல், ஆகிய முத்தொழில்களையும் அதற்கான சக்கி பெறும் அறிவையும் அவர்களுக்கு அருளினார்.

செயல் அலுவலர்
அருள்மிகு. வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் (குருபகவான் பரிகாரதலம் ).
திட்டை - 613 003, தஞ்சாவூர் மாவட்டம்.
தொலைபேசி எண் : 04362 - 252858                    
 அலைபேசி எண் :  9443445864

No comments: