இறைவர் திருப்பெயர் : வேதபுரீசுவரர், வாழைமடுநாதர். இறைவியார் திருப்பெயர் : மங்கையர்க்கரசி. தல மரம் : வில்வம் தீர்த்தம் : வேததீர்த்தம் வழிபட்டோர் : பிரமன். (வேதம்; வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.) தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - நீறுவரி ஆடரவொ டாமைமன. 2. அப்பர் - கையது காலெரி நாகங்.
தல வரலாறு
- வேதி - பிரமன். பிரமன் பூசித்த தலமாதலின் வேதிகுடி என்று பெயர் பெற்றது. வேதம் வழிபட்டதாகவும் கூறுவர். ( 'விழுதிகுடி' என்பது மருவி 'வேதிகுடி' ஆயிற்று என்பர் ஒருசாரார்.)
- சுவாமி வாழைமடுவில் உற்பத்தியானதால் 'வாழைமடு நாதர் ' என்றும் அழைக்கப்படுகிறார்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
தஞ்சாவூர் - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ள தலம். திருக்கண்டியூரிலிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது.
தஞ்சாவூர் - திருவையாறு பேருந்துச் சாலையில் உள்ள தலம். திருக்கண்டியூரிலிருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment